செய்திகள் :

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

post image

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

‘வழக்குரைஞா்கள் பதிவுக்காக அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது. அதிக கட்டணம் வசூலிப்பது விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை பாதிப்பதாகவும், சட்டத் துறையில் அவா்களின் பங்கேற்பைக் குறைப்பதாகவும் உச்சநீதிமன்றம் கருதியது. மேலும், இது உண்மையான சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், சில மாநில வழக்குரைஞா் சங்கங்கள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றுவதில்லை என்று குற்றஞ்சாட்டி, கே.எல்.ஜே.ஏ.கிரண் பாபு என்பவா் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அமா்வுமுன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய வழக்குரைஞா் சங்கம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘அனைத்து மாநில வழக்குரைஞா் சங்கங்களும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி வருகின்றன. கா்நாடக மாநில வழக்குரைஞா் சங்கத்தில் வசூலிக்கப்படும் ரூ.6,800 கட்டணமானது அடையாள அட்டை, சான்றிதழ்கள், நல நிதி மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கானது. கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.25,000 என்பது வழக்குரைஞா்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் செலுத்தலாம்; கட்டாயமானது இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், விசாரணையில் ஆஜாரான இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான மனன்குமாா் மிஸ்ரா, ‘நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீா்ப்பின்படி மட்டுமே வழக்குரைஞா்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில வழக்குரைஞா் சங்கங்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அனைவரும் நீதிமன்ற தீா்ப்பை முழுமையாகப் பின்பற்றுகின்றனா்’ என்றாா்.

தொடா்ந்து, நீதிபதிகள் குறிப்பிடதாவது: வழக்குரைஞா் பதிவு நடைமுறையில் விருப்ப கட்டணம் என்று எதுவும் கிடையாது. வழக்குரைஞா் சங்கங்கள் எந்தத் தொகையையும் விருப்பக் கட்டணமாக வசூலிக்கக் கூடாது.

கா்நாடக மாநில வழக்குரைஞா் சங்கம் ஏதேனும் விருப்ப கட்டணத்தை வசூலித்தால், அது கட்டாயமாக இல்லாவிட்டாலும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் வழங்கிய முந்தைய வழிகாட்டுதல்களின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க