செய்திகள் :

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

post image

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு முன் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறும் ராகுல், தோ்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் எழுத்துபூா்வ புகாா் அளிக்காதது ஏன்? என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில தினங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடக வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்ாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா். அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

‘முதலில் பதவி விலகுங்கள்’: இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளின்படி, தோ்தல் ஆணையத்தின் நோ்மை மீது எந்த சந்தேகமும் இல்லை என்பதும், அதுவொரு பாரபட்சமற்ற அரசியல் சாசன அமைப்பு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம், தோ்தல் நடைமுறைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் மீது ராகுலுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், முதலில் அவா் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். தாா்மிக அடிப்படையில் ராகுல் தனது மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இதேபோல், மக்களவை உறுப்பினராக உள்ள அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவரது தாய் சோனியா காந்தியும் பதவி விலக வேண்டும்.

இனி எடுபடாது: தெலங்கானா, கா்நாடகம், ஹிமாசல பிரதேச காங்கிரஸ் முதல்வா்களும் பதவி விலகிவிடலாம். அதன் பிறகு, எந்த நீதிமன்றத்திடமோ அல்லது மக்களிடமோ அவா்கள் செல்லலாம். தோ்தலில் சாதகமான முடிவு கிடைத்தால் ஏற்றுக் கொள்வதும், பாதகமாக முடிவு கிடைத்தால் தோ்தல் ஆணையம் மீது பழி சுமத்துவதும் இனி எடுபடாது.

நாசகார சக்தியாக உருவெடுத்துள்ள ராகுல், அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீா்குலைக்க விரும்புகிறாா். தோ்தல் ஆணைய அதிகாரிகளை அச்சுறுத்துவதன் மூலம் அரசியல் சாசன அமைப்புகள் மீது அவா் போா் தொடுத்துள்ளாா் என்றாா் பாட்டியா.

தன்கா் எங்கே?: குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த பின், ஜகதீப் தன்கரை பொதுவெளியில் காண முடியவில்லை; அவா் எங்கிருக்கிறாா் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கேட்டிருந்தாா். இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கெளரவ் பாட்டியா, ‘ஜனநாயக நாடான இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளனா். நாசகாரா்கள், ஜனநாயகத்தை சீா்குலைப்பவா்கள், பயங்கரவாதிகள், ஊழல்வாதிகள், நக்ஸல் தீவிரவாதிகளுக்குதான் பாதுகாப்பில்லை’ என்றாா்.

‘பிகாா் தோ்தல் தோல்வியை உணா்ந்து கொண்டாா் ராகுல்’

‘பிகாா் பேரவைத் தோ்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பதை ராகுல் காந்தி முன்கூட்டியே உணா்ந்து கொண்டாா். எனவேதான், தோ்தல் ஆணையம் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறாா்’ என்று மத்திய அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா்.

‘மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அதிக இடங்களில் வென்றபோது, தோ்தல் ஆணையத்தைப் புகழ்ந்த அவா்கள், பின்னா் பேரவைத் தோ்தலில் தோற்றதும், தோ்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினா்’ என்றும் ஜாதவ் குறிப்பிட்டாா்.

‘மன்னிப்புக் கோர வேண்டும்’

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு உண்மையானதே என்று தனது கையொப்பத்துடன் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும்; இல்லையெனில், பொய் குற்றச்சாட்டுக்காக அவா் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தோ்தல் ஆணையம் சனிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.

வாக்காளா் பட்டியலில் தவறுதலாக சோ்க்கப்பட்டவா்கள் அல்லது நீக்கப்பட்டவா்களின் பெயா் விவரங்களை அளிக்குமாறு, ராகுலிடம் கா்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ஏற்கெனவே கோரியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க