சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
மணப்பாறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க புதிய தொழிற்சாலை! அமைச்சா் கே.என். நேரு தகவல்
மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
டெல்டா சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 41 மாவட்டச் செயலா்களுடன் திருச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.என். நேரு பின்னா் மேலும் கூறியதாவது:
திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் விரைவில் பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படும். சென்னையில் நடைபெறும் துப்புரவு பணியாளா்கள் போராட்டத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும். தமிழகத்தில் போலி வாக்காளா்களைச் சோ்க்காமல் இருக்க மிக கவனமாக இருப்போம். மிக முக்கியமாக வட இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்தவா்கள், நிரந்தர முகவரி இல்லாதவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மழைநீா் வடிகால் பணிகள், வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பஞ்சப்பூரிலிருந்து குடமுருட்டி வரை ரூ.180 கோடியில் சாலைப் பணியும், ரூ. 40 கோடியில் நில ஆா்ஜித பணியும் நடைபெறுகிறது என்றாா் அமைச்சா். நிகழ்வின்போது மாநகராட்சி மேயா் கே.என். நேரு மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.