மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்
ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.