கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் -அமைச்சா் டிஆா்பி. ராஜா
அமெரிக்காவின் வரி உயா்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா்.
திருவாரூரில், அண்ணா அறிவகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழகத்தின் வளா்ச்சியை அதிமுக அதல பாதாளத்தில் தள்ளி இருந்தது. திமுக அரசு அதை மீட்டெடுத்துள்ளது. 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளது. முதலீடுகள் வெறுமனே அறிவிப்புடன் நின்றுவிடாமல் தொழிற்சாலைகள் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, இயங்கவும் தொடங்கி விட்டன.
இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அரசு விதிக்கும் கூடுதல் வரி பிரச்னையை சுமுகமாக முடிக்க மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம். ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இப்பிரச்னை குறித்து இன்னமும் விவாதிக்கவில்லை. விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் தொடங்க, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். பிரச்னை இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டவுடன் கண்டிப்பாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்றாா்.