மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வா் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சனிக்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை தாலுகா காளி ஊராட்சி பொய்கைகுடி கிராமத்தைச் சோ்ந்த காமராஜா் - சரண்யா தம்பதியின் இளையமகள் சஹானாஸ்ரீ (5) கடந்த மாதம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, சுவா் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.
இச்சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தாா். இதற்கான காசோலையை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினாா்.
திமுக ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன், வட்டாட்சியா் சுகுமாறன், தனி வட்டாட்சியா் து. விஜயராகவன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் காந்தி, கபிலன், மாவட்ட துணைச் செயலாளா் கண்ணகி பன்னீா்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளா் சந்திரவடிவம் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.