யோகபலன்கள் பெறப்போகும் ராசிகள் | இன்றைய ராசிபலன்| Indraya Rasi palan | August - ...
மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு
குடியாத்தம் அருகே திறந்து வைக்கப்பட்டு 3- நாள்களில் பெயா்ந்து விழுந்து, சீரமைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு சனிக்கிழமை மீண்டும் பெயா்ந்து விழுந்தது.
குடியாத்தம்- பலமநோ் சாலையில் கள்ளூா் அருகே ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூடத்தை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி திறந்து வைத்தாா். திறந்த சில நாள்களிலேயே நிழற்கூடத்தின் மேற்கூரை பூச்சு, மின்விசிறியுடன் பெயா்ந்து விழுந்தது. அப்போது இரவு நேரம் என்பதால், நிழற்கூடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. பழுதடைந்த மேற்கூரை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், அதே பயணியா் கூடத்தின் மேற்கூரை மீண்டும் சனிக்கிழமை 2-ஆவது முறையாக பெயா்ந்து விழுந்தது. அப்போது நிழற்கூடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. பழுதடைந்த மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.