மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!
கவரப்பேட்டை: ``தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகளை கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம்'' - ரயில்வே
2024-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்து உள்ள கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு செல்லும் ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் ஆகும்.
அக்டோபர் 11-ம் தேதி நடந்த இந்த விபத்தில், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன... ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 20 காயமடைந்தனர். ஆனால், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
'நாசவேலை' காரணமாக
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியாகி உள்ளது. அது குறித்து தெற்கு மண்டல ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர், "இந்த விபத்து திடீர் அல்லது தானியங்கி தோல்வியால் எதுவும் ஏற்படவில்லை.
தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை யாரோ வேண்டுமென்றே கழற்றி இருக்கிறார்கள். இந்த நாசவேலை தான் விபத்திற்கு காரணம். அதனால், இந்த விபத்து 'நாசவேலை'க்கு கீழ் வகையறப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், அந்த ரயிலின் ஓட்டுநர் ஜி.சுப்ரமணியின் விழிப்புணர்வு மற்றும் சமயோசிதத்தையும் பாராட்டியுள்ளார்.