செய்திகள் :

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

post image

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார்.

சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த பெண்மணியை அக்கம்பக்கத்தினர் ஏணியின் உதவியோடு மீட்டுள்ளனர்.

Baidu Fell Viral
Baidu Fell Viral

சீன சமூக வலைத்தளங்களில், ஒரு கட்டுமான குழிக்குள் பாய்டு வாகனம் விழுந்துகிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கட்டுமான தளத்தில் தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இருந்தன என்றும் அவற்றை மீறி விபத்து நடந்துள்ளது என்றும் ஹுஷாங் செய்தி தளம் தெரிவித்திருக்கிறது.

இந்த சம்பவம் சீனாவில் ரோபோ டாக்ஸிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும் பாய்டு நிறுவனம் இதுவரையில் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.

பாய்டு சீனாவின் மிகப் பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்று. வுஹான், பெய்ஜிங் மற்றும் சோங்கிங் போன்ற பெரு நகரங்களில் ரோடோ டாக்ஸி சேவையை அளித்து வருகிறது.

சமீபத்தில் உலக அளவில் தங்கள் சேவையை விரிவுபடுத்த முயன்று வருகிறது. அமெரிக்காவில் ஊபர் லிஃப்ட் போன்ற நிறுவங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பாய்டுவுக்கு போட்டி நிறுவனமாக கருதப்படும் pony.ai-ன் கார் ஒன்று பெய்ஜிங்கில் பற்றி எரியும் வீடியோ ஒன்று, மே மாதம் வெளியாகி நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த நிறுவனம், பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்டிருந்த கார் கணினி பிரச்னையால் எரிந்ததாகவும், பயணிகளுக்கு பிரச்னை இல்லை என்றும் விளக்கமளித்தது.

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் கா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்நோக்கி...விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேமுத்துலிங்காபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர்மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அ... மேலும் பார்க்க

`உயிர் பலி வாங்கும் தொப்பூர் கணவாய்' - விபத்தை தவிர்க்க மேம்பால பணி ஆரம்பம் | Photo Album

தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்விபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப... மேலும் பார்க்க

கவரப்பேட்டை: ``தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகளை கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம்'' - ரயில்வே

2024-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்து உள்ள கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந... மேலும் பார்க்க