செய்திகள் :

Coolie: "அடுத்து அஜித் குமாரை வைத்து படம் எடுப்பீர்கள்?" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

post image

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கூலி திரைப்படம்
கூலி திரைப்படம்

இந்நிலையில், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். 'கூலி' படத்தின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. கைதட்டல்கள்தான் இதற்கான பதில்" என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து, "ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது படம் பண்ணுவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

அனிருத்
அனிருத்

அதேபோல படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், "தலைவரின் 50-வது வருடத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆடினே இருப்பேன்' என ஒரு மீம்ஸ் பார்த்தேன். இனி நான் ஆடினே இருப்பேன்" என்று அனிருத் உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?

விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களை வைத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகிறார் சைமன் (நாகர்ஜுனா). சைமனுடைய விசுவாசியான தயாள் (சௌபின் ஷாஹிர்), மொத்த து... மேலும் பார்க்க

Stray Dogs: ``ஒன்னும் புரியல; நாட்டை நினைச்சு வெட்கப்படுறேன்'' -கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சதா

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும்... மேலும் பார்க்க

Coolie: ``படத்திற்கான வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார்' - லதா ரஜினிகாந்த்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ... மேலும் பார்க்க

Rajinikanth 50: ``50 ஆண்டுகால ஸ்டைல், தன்னம்பிக்கை, மாஸ்" இயக்குநர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எ... மேலும் பார்க்க

Rajinikanth 50: நடிகர்கள் சூர்யா, சிம்பு முதல் சூரி வரை - ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எ... மேலும் பார்க்க