செய்திகள் :

தொடர் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு காவல் துறை அறிவுரை!

post image

தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்வோர் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளை(ஆக. 15) முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள், தொடர் விடுமுறையைக் கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட சாலைகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறித்தியுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரே வழியைப் பயன்படுத்தாமல் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம்

Due to the ongoing holidays, the police have advised those traveling to the southern districts to use alternative routes.

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை : ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அனை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(வியாழக்கிழமை... மேலும் பார்க்க