சித்தர்காடு: அரிசி ஆலையால் இன்னல்படும் மக்கள்; காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவ...
பெனால்டியை தவறவிட்டதால் ரசிகர்கள் இனவெறி கருத்துகள்: அணி நிர்வாகம் கண்டனம்!
சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியின் பெனால்டியில் சொதப்பிய வீரரை ரசிகர்கள் நிறத்தை வைத்து திட்டுவதால் விமர்சித்ததால் அந்த அணி அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் மோதின.
90 நிமிட போட்டி முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.
இதிலும் 2-2 என இருக்கும்போது டோட்டன்ஹாம் அணியின் மதியாஸ் டெல் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறவிட்டார்.
கடைசியில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது. இதனால் டோட்டன்ஹாம் ரசிகர்கள் வசைபாட தொடங்கினார்கள்.
பிரான்ஸைச் சேர்ந்த மதியாஸ் டெல் (20 வயது) டோட்டன்ஹாம் அணிக்காக விளையாடி வருகிறார்.
கறுப்பு நிறத்தில் இருப்பதால் இவரை பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதற்காக சமூக வலைதளத்தில் பலரும் இனவெறி ரீதியாக ஆபாசமாக திட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தனது சமூக வலைதளத்தில், “சூப்பர் கோப்பை தோல்வியால் சமூக வலைதளத்தில் மதியால் டெல் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
மதியாஸ் தைரியமாக முன்வந்து பெனால்டியை எடுத்தார். இருந்தும் அவரை தங்களது போலியான கணக்கிலிருந்து பிரபலத்துக்காக திட்டுபவர்கள் கோழைகள்.
இதற்காக, எங்களால் முடிந்த வலுவான நடவடிக்கையை எடுப்போம். மதியாஸின் பக்கம் நிற்கிறோம் எனக் கூறியுள்ளது.
— Shinzu (@shinzu254) August 14, 2025