தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஆக. 14) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரக் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரப் பகுதிகளை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் , இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, கோவை மற்றும் நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க: கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்