ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை நாளாகும். அரசு விடுமுறை நாளில் சென்னை புறநகர் ரயில்களின் சேவை குறைக்கப்படும்.
அந்த வகையில் நாளை சுதந்திர நாள் விடுமுறையையொட்டி சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல மெட்ரோ ரயில்களும் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் அதற்கு இடைப்பட்ட நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.