ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்!
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தேர்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தாள்-2 தோ்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வு நடத்த வேண்டும்.
டெட் தாள்-1 தோ்வு நவம்பா் 1-ஆம் தேதியும், தாள்-2 தோ்வு நவம்பா் 2-ஆம் தேதியும் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அன்றைய தினம் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படும் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், தேர்வு தேதியை மாற்றவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனால், அவர்களின் கோரிக்கை ஏற்று தேர்வு தேதி மாற்றப்பட்டு நவம்பர் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு நவம்பர் 15, 16 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.