செய்திகள் :

Coolie - War 2: ரஜினி - ஹ்ரித்திக் இணைந்து நடித்த காட்சி; அனுபவம் பகிர்ந்த பாலிவுட் நடிகர்!

post image

Coolie - War 2

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் வார் 2 திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

இதனை முன்னிட்டு 1986ம் ஆண்டு ஹ்ரித்திக் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'பகவான் தாதா' படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்திய அளவில் கூலி மற்றும் வார் 2 திரைப்படங்கள் போட்டிப்போடுகின்றன. ஹ்ரித்திக் சினிமாவில் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு நிறைவை வாழ்த்தியுள்ளார்.

லோகேஷ் - ரஜினி
கூலி படப்பிடிப்பில் ரஜினி

பகவான் தாதா படத்தில் நடிக்கும்போது ஹ்ரித்திக் ரோஷன் வயது 12.

தாயால் கைவிடப்பட்ட குழந்தையாக ஹ்ரித்திக்கும், நேர்மையான கிராமவாசியாக ரஜினியும் நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ஹ்ரித்திக், "உங்கள் பக்கத்தில்தான் ஒரு நடிகனாக என் முதல் அடியை எடுத்து வைத்தேன். நீங்கள் என்னுடைய முதல் குருக்களில் ஒருவர் ரஜினிகாந்த் சார். தொடர்ந்து ஓர் உத்வேகமாகவும், தரநிலையாகவும் இருக்கிறீர்கள். திரையில் உங்கள் 50 ஆண்டு மேஜிக்கை நிறைவு செய்வதற்கு வாழ்த்துகள்!" என சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார்.

இன்று ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்...

இதேபோல ஹ்ரித்திக் ரோஷன் ரஜினிகாந்த் பற்றி The Roshans என்ற Netflix ஆவணப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில், "நான் அவரை ரஜினி அங்கிள் என்று அழைப்பேன். என்னுடைய வழியிலேயே அவருடன் பழகினேன். இன்று அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் முற்றிலும் வேறுவிதமாக இருப்பேன். அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் கணத்தை உணர்ந்திருப்பேன்.

அவர் மிகவும் மென்மையானவர். ஷாட்டில் நான் குழப்பினால் என் தாத்தா 'கட்' சொல்வார், பழியை ரஜினி சார் ஏற்றுக்கொள்வார். அதனால் குழந்தையாக இருந்த நான் விழிப்பாக இருக்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்: 'மராட்டிய பூர்வீகம்' முதல் 'சமூக அக்கறை' வரை - CPI தலைவர் முத்தரசன் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அவரது திரை வாழ்க்கையின் 50 ஆண்டுகள் நிறைவையும் ஒன்றாக கொண்டாடுவதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரு... மேலும் பார்க்க

Vyjayanthimala: "92 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்! " - வைஜெயந்திமாலா

தமிழ், தெலுங்கு, இந்தி என அப்போதே இந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை வைஜயந்திமாலா. நடிப்பைத் தாண்டி நடனத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் இவர். Vyjayanthimalaதன்னுடைய சினிமா கரியரின் உச்சத்தில் இருந... மேலும் பார்க்க

Coolie: `இளையராஜா - தேவா' - 'கூலி' படத்தில் 2 ரெட்ரோ பாடல்கள் இதுதான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்தரா, செளபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் எனப் பலரும் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குக... மேலும் பார்க்க

Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?

விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களை வைத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகிறார் சைமன் (நாகர்ஜுனா). சைமனுடைய விசுவாசியான தயாள் (சௌபின் ஷாஹிர்), மொத்த து... மேலும் பார்க்க

Coolie: "அடுத்து அஜித் குமாரை வைத்து படம் எடுப்பீர்கள்?" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபே... மேலும் பார்க்க