மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
``யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" - நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்பளித்தது.

அதில், ``ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே. நடிகர் தர்ஷன் உடனடியாக சரணடைய வேண்டும். அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நடிகர் தர்ஷன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் சலுகைகளைப் பெறுவது தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...