செய்திகள் :

'இனி 4 மணிநேரம் தான்' - காசோலை கிளியரிங் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் குட் நியூஸ்!

post image

இனி காசோலையை வங்கியில் போட்டுவிட்டு, நாள் கணக்கில் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

எவ்வளவு மணிநேரத்தில்..?

அதன்படி, இனிமேல் காசோலைகள் வெறும் 4 மணி நேரத்திற்குள் கிளியரிங் மற்றும் செட்டில்மென்ட் செய்யப்படும்.

இதுவரை இருந்த நடைமுறைப்படி, காசோலைகள் இரண்டு நாள்களுக்குள் கிளியரிங் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நடைமுறையை எளிதாக்கவும், மக்களுக்கு வசதியாகவும் மாற்றவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

எப்போது முதல் அமல்?

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை வருகிற அக்டோபர் 4-ம் தேதி முதல் முதற்கட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.

பின்னர், முழுவதுமாக, அடுத்த ஆண்டு ஜனவர் 3-ம் தேதிக்குள் செயல்படுத்தப்பட்டுவிடும்.

முதல் கட்டத்தில், முக்கிய வங்கிகள் மற்றும் பெரிய நகரங்களில் செயல்படுத்தப்படும்.

பின்னர், இரண்டாம் கட்டத்தில், எல்லா பிராந்தியங்களிலும் இருக்கும் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும்.

ஆக, மக்களே இனிமேல் பணத்திற்காக நாள் கணக்கில் காத்திருக்க தேவையில்லை.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4