செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

குட் டே

இயக்குநர் என். அரவிந்தன் இயக்கத்தில் காளி வெங்கட், பகவதி பெருமாள், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான குட் டே திரைப்படம் நாளை(ஆக. 15) சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.

ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா

அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான மலையாள மொழிப் படமான ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா, ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது.

அஃகேனம்

அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான அஃகேனம் எனும் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

கான்ஸ்டபிள் கனகம்

பிரசாந்த் குமார் இயக்கியுள்ள தெலுங்கு மொழி இணையத் தொடர் கான்ஸ்டபிள் கனகம். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

டாக் மேன்

பீட்டர் ஹேஸ்டிங்ஸ் இயக்கிய அனிமேஷன் படம் டாக் மேன் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

கடந்த வார ஓடிடியில்

இந்தப் படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான மாமன் திரைப்படத்தை ஜி5 ஓடிடியிலும் பறந்து போ திரைப்படத்தை ஹாட் ஸ்டாரிலும் ஓஹோ எந்தன் பேபி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டிரெண்டிங் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சின்ன திரை நடிகர் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் “காந்தி கண்ணாடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான... மேலும் பார்க்க

நயன்தாராவின் புதிய படத்தின் டீசர் அறிவிப்பு!

நயன்தாராவின் புதிய படமான டியர் ஸ்டூடன்ஸின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்ட... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

பிரபல மலையாள நடிகை மினு முனீர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மினு முனீர், 10 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 14 ... மேலும் பார்க்க

காவல்துறை அதிகாரியாக சூர்யா?

நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்... மேலும் பார்க்க

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் வெஸ் பயஸ் காலமானார். கொல்கத்தாவைச் சேர்ந்த வெஸ் பயாஸ் (80) இந்திய அணிக்காக ஹாக்கி அணியில் மிட்ஃபீல்டராக விளையாடியுள்ளார். ஒலிம்பிக்ஸில் 1972ஆம் ஆண்டு இந்திய ஹா... மேலும் பார்க்க

தேவா வந்துட்டார், வழிவிடலாமா? கூலி - திரை விமர்சனம்!

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டிணத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்... மேலும் பார்க்க