செய்திகள் :

தேனி: பள்ளியில் ஈட்டி குத்தி காயமடைந்த சிறுவன்; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு!

post image

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் - சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்த பின்பு பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் சிறுவன் விளையாடுவது வழக்கம். அதன்படி கடந்த 7 ஆம் தேதியன்று கால்பந்து விளையாடியதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் திபேஸ் (19) என்ற கல்லூரி மாணவர் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.

சாய் பிரசாத்

இந்நிலையில் திபேஸ் வீசிய ஈட்டி தவறுதலாக சிறுவன் சாய் பிரசாத்தின் தலையில் குத்தி உள்ளது. இதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. தொடர்ந்து செயற்கை சுவாசத்தின் மூலம் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சாய் பிரசாத் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் ஈட்டி பாய்ந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - சிறைக்கு சென்ற பின்னணி

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா (42). இவரின் மனைவி நிலவர் நிஷா. கடந்த 10.04.2025-ம் தேதி அதிகாலை காதர் பாஷா தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துவழிவிட்டான் என்பவரின் வீட்டு... மேலும் பார்க்க

சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி... மேலும் பார்க்க

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க