``தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்'' - உச்சநீதிமன்...
Coolie: ``படத்திற்கான வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார்' - லதா ரஜினிகாந்த்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 'கூலி' படம் வெளியானதைத் தொடர்ந்து ரஜினிக்கும், படக்குழுவினருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'கூலி' படம் பார்க்க ரோஹிணி திரையரங்கத்திற்கு வந்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். "நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
இன்றைக்குதான் அபூர்வ ராகங்கள் வெளியானது. அப்படத்தின் இயக்குநரானப் பாலசந்தர் சாரை மிஸ் செய்கிறேன். 'கூலி' படத்திற்காக உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அன்பு காட்டுவதை நாங்கள் பார்க்கிறோம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ரசிகர்களைப் போல நானும் இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லோரும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவரும் (ரஜினி) இந்தப் படத்திற்கான வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார். ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...