செய்திகள் :

Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

post image

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி' நாளை (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும், ரசிகர்கள் பலரும் கூலி படம் எல்.சி.யு-க்குள் வருமா அல்லது தனி படமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் - ரஜினி
லோகேஷ் - ரஜினி

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் லோகேஷ் கனகராஜ், "கூலி படம் வெளியாக சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இதை ஒரு கனவு போல நான் உணர்கிறேன்.

இப்படத்தை முழு சுதந்திரத்துடன் எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தலைவர் ரஜினிகாந்த் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தப் பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றிய கிங் நாகார்ஜுனா சார், ரியல் ஸ்டார் உபேந்திரா சார், சௌபின் சார், சத்யராஜ் சார், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர் கான் சார் ஆகியோருக்கு நன்றி.

இப்படத்தில் பலமாகவும், அர்ப்பணிப்பின் தூணாகவும் இருந்த எனது குழுவினருக்கு ஆழ்ந்த நன்றி.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்துக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றனர். இப்படத்தில் பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், இப்படத்தில் எனக்கு முழு படைப்பு சுதந்திரத்தை வழங்கியதற்காக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. கண்ணன் சாருக்கும் மனமார்ந்த நன்றி.

லோகேஷ் - ரஜினி
லோகேஷ் - ரஜினி

ஒட்டுமொத்தமாக முழு குழுவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படத்தில் எனக்கு உதவிய எனது குழு, தி ரூட், ஜெகதீஷ், ஐஸ்வர்யா மற்றும் ராதேயன் ஆகியோருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

என் மீதும், இப்படத்தின் மீதும் அன்பும், ஆதரவும் கொடுத்த எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

லோகேஷ் அறிக்கை
லோகேஷ் அறிக்கை

இன்னும் சில மணிநேரங்களில் கூலி உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் இருக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.

படத்தின் எந்த ஸ்பாய்லர்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கு மேல், கூலி படமானது எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு முழுக்க முழுக்க தனி படம்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Coolie: 'உதவி இயக்குநர் டு டாப் நடிகர்' - ஆசான் கொடுத்த சினிமா வாய்ப்பு; நிரூபித்த செளபின் சாஹிர்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நாளை வெளியாகிறது. மலையாள நடிகர் செளபின் சாஹிரை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவர தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பலரும் முயற்சித்தார்கள். அதனை தற்போது இ... மேலும் பார்க்க

Coolie: எங்கும் 'கூலி' ரிலீஸ் கொண்டாட்டம்!; கேஸுவலாக பெங்களூரு ரோடு டிரிப் போன ரஜினி!

ரஜினி படம் ரிலீஸ் என்றால் அன்றுதான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் திருவிழா எல்லாமே நடக்கும். ரஜினி இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை ஒரு படம் என நடித்த காலங்கள் உண்டு. அப்போது எல்லாம் வருகிற தீபாவளி, பொங்க... மேலும் பார்க்க

Sridevi: 'அவருடைய 27-வது பிறந்தநாளில்...'- ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த போனி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் கணவர் போனி கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தது இணையத்தில்... மேலும் பார்க்க

Rajini: 'நீங்கள் இருக்கும் அதே துறையில் நானும் இருப்பது!'- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பதிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்... மேலும் பார்க்க

Coolie: 'தெலுங்கு சினிமா 'கிங்' டு ரஜினி வில்லன்' - 'ரட்சகன்' நாகர்ஜுனா சில குறிப்புகள்!

’நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருக்கிறது ஆச்சர்யம்தான்’ என்றுரஜினிகாந்த்தால் ‘கூலி’ பட இசைவெளியீட்டு விழாவில் பாராட்டப்பட்டவர் நடிகர் நாகார்ஜுனா.அந்தளவிற்கு பிட்னஸ் உடன் இருக்கும்... மேலும் பார்க்க