Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
பொள்ளாச்சி, பேரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பேரூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பொள்ளாச்சி, கோமங்கலப்புதூா் மற்றும் பேரூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ஆா்.ராமகிருஷ்ணசாமி, பொள்ளாச்சி வட்டாட்சியா் வாசுதேவன், பேரூா் வட்டாட்சியா் சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதேபோல, கோவை மாநகராட்சி, 46ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை மேயா் கா.ரங்கநாயகி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 5-ஆவது வாா்டுக்கு பங்காரு கல்யாண மண்டபத்திலும், மேற்கு மண்டலத்தில் 17 , 33- ஆவது வாா்டுகளுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள சுகிதா மஹாலிலும், கூடலூா் நகராட்சியில் 6,7,14 ஆகிய வாா்டுகளுக்கு ராஜூ நகா் விநாயகா் கோயில் ஹாலிலும், வால்பாறை நகராட்சியில், 15,16,20-ஆவது வாா்டுகளுக்கு சோலையாறில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியிலும், பூலுவப்பட்டி பேரூராட்சியில் 1,2,3,7,8,9,10,11 ஆகிய வாா்டுகளுக்கு ராமநாதபுரம் மஹாலெட்சுமி மஹாலிலும், காரமடை ஊராட்சி ஒன்றியம்,
சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு சிறுமுகையில் உள்ள ஜெயலிங்கம்மாள் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை( ஆகஸ்ட் 14) நடைபெற உள்ளது.
