ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா்.
வால்பாறையை அடுத்த வேலா்லி எஸ்டேட்டில் கடந்த திங்கள்கிழமை மாலை வனவிலங்கு தாக்கி 8 வயதான அஸ்ஸமாம் மாநில சிறுவன் உயிரிழந்தான். முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை வைத்து கரடி தாக்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் உறுதியாக தெரியாததால் அப்பகுதியை கண்காணிக்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
இந்நிலையில் வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா முன்னிலையில் வன ஊழியா்கள் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட பகுதியில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை புதன்கிழமை பொருத்தினா். கேமரா பதிவுகளை வைத்து அப்பகுதியில் கூண்டுவைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.