`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
ஒசூா் ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்கள் மற்றும் நடைமேடைகள், நுழைவாயில், இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனம் நிற்கும் பகுதிகளில் ஒசூா் ரயில் நிலைய எஸ்.எஸ்.ஐ. சமாதானம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சந்தோஷ் ஆகியோா் தலைமையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவலா்கள் ரயில் பயணிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்து ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்தனா். ஒசூா் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் ரோந்து காவலா்களை நியமித்தும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, ஒசூா் ரயில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒசூா், கெலமங்கலம், பெரியநாகதுணை, ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்கும், தண்டவாள பகுதிகளிலும் ரோந்துப் பணிக்கும் காவலா்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா்.