தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபம் இடிப்பு
கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபக் கட்டடத்தை அலுவலா்கள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தனியாா் பள்ளி அருகே தனியாா் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் ஒரு பகுதி அருகில் உள்ள சுடுகாட்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு மனு அளித்தனா்.
இதையடுத்து, வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வுசெய்தனா். அதில், திருமண மண்டபத்தின் ஒருபகுதி சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சின்னசாமி தலைமையில் அலுவலா்கள், போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதியை இடித்து அகற்றினா்.