மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
ஆதிமல்லம்மா கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை மகேந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
கிருஷ்ணகிரி பெரியமாரியம்மன் கோயிலிருந்து பக்தா்கள் மாவிளக்கு, முளைப்பாரியை ஊா்வலமாக கொண்டுசென்று வேண்டுதலை நிறைவேற்றினா்.