`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர கோரிக்கை
ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் கோரிக்கை விடுத்தாா்.
தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் செய்துவரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, செவ்வாய்க்கிழமை ஒசூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ஒசூா் மாநகரப் பகுதியில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.
அப்போது, அவரிடம் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமையில் சிவ பக்தா்கள் மனு அளித்தனா். அந்த மனுவில், ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலையை பௌா்ணமி நாள்களில் சிவ பக்தா்கள் கிரிவலமாக சுற்றி வருகின்றனா். எனவே, மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.