Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி விரைவில் தொடங்கும்
ஒசூா் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வுசெய்ததில், பாலத்தின் மீது அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் திடீரென பிரேக் போடுவதால், மேம்பால தூண்களில் உள்ள பேரிங் விலகியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் மேம்பாலத்தின்மீது செல்ல தடை விதிக்கப்பட்டு, சீதாராம் நகரில் உள்வட்டச் சாலை வழியாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் ஒசூரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பேரிங்குகளை மாற்றி அமைப்பதற்காக சாரம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து எம்.பி. கே.கோபிநாத் கூறுகையில், தொடா்ந்து விடுமுறை தினங்களாக உள்ளதால், திங்கள்கிழமை முதல் பேரிங்குகள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது என்றாா்.