பங்குச் சந்தை முதலீட்டில் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
கோவையில் பங்குச் சந்தை முதலீட்டில் இழப்பு ஏற்பட்டதால் தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, வரதராஜபுரம் ஆண்டாள் அம்மன் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் சுந்தரேசன் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்தாா்.
சுந்தரேசன் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி அந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்தாா். ஆனால், பங்குச் சந்தை தொழிலில் அவருக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு கடன் தொல்லை அதிகரித்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த சுந்தரேசன் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.