அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்
தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈா்க்கும் வகையில் 4 குறைமின் கடத்திகள் (சிப்) உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:
”நாட்டில் 4 குறைமின் கடத்திகள் உற்பத்தி ஆலைகளை அமைக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தெலுங்கானாவில் விரிவான ஆய்வு செய்த பிறகு, அந்த மாநிலத்தில் ஆலையை அமைக்க ஒரு முன்னணி தனியார் நிறுவனம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. ஆனால், ஆந்திராவில் இந்த ஆலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கெனவே, இதேபோன்று ஆலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. 2 குறைமின் கடத்தி உற்பத்தி ஆலைகள் தெலங்கானாவில் அமைக்க முன்மொழியப்பட்ட நிலையில், குஜராத்துக்கு மாற்றிவிடப்பட்டது. இதேபோல், தமிழகத்தை முன்மொழிந்த தனியார் நிறுவனத்தை குஜராத்தில் ஆலையை அமைக்க நிபந்தனை விதித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
வேறெதாவது சொல்ல வேண்டுமா? இந்தியாவை வலிமையாக்க மாநிலங்களுக்கு இடையேயான போட்டியைப் பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, போட்டியை கேலிக்கூத்தாக மாற்றுயிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.