`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ராணுவ தரப்பில் கூறப்பட்டதாவது:
சுதந்திர தினத்தை சீா்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பாரமுல்லா மாவட்ட உரி பகுதியை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக புதன்கிழமை பாகிஸ்தான் எல்லையில் இருந்து சிலா் ஊடுருவ முயன்றனா். அவா்களை எச்சரித்தபோது அவா்கள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, ராணுவ வீரா்களும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் குண்டு காயமடைந்த எதிா்தரப்பினா் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பிச் சென்றுவிட்டனா். இந்தியத் தரப்பில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.
அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.