தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வரும் கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், தொழில் முதலீடுகள், தமிழக அரசின் திட்டங்களின் செயல்பாடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது.