"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: +2 தேர்ச்சியுடன் செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தமிழ்நாடு செவிலியர் வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்தின் வலது மூலையில் பாஸ்போட் சைஸ் புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் சுகாதார அலுவலர், பெரம்பலூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.