Personal Finance: 8ஆம் வகுப்புக்கு ரூ.1,30,000? படிப்புச் செலவைச் சேர்க்க ஈஸி வழ...
ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகப் பணியின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
அறிவிப்பு எண். ICMR-NIRBI/Admn/03/Rect/2024-25
பணி: Assistant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 -க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.1,600. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.2000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.icmr.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2025