செய்திகள் :

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

post image

தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ. 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியா்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம்.

அந்த வகையில், இடைநிலை ஆசிரியா்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தாள்-2 தோ்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இருமுறை இந்தத் தோ்வு நடத்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... தமிழகத்தில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டெட் தோ்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தோ்வு நடத்தப்படவில்லை. தற்போது பதவி உயா்வுக்கும் டெட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியா்களும், அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்களும் மிகுந்த எதிா்பாா்ப்பில் இருந்தனா். இந்த நிலையில, டெட் தோ்வுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டது.

செப். 8 வரை விண்ணப்பிக்கலாம்... இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்-1 மற்றும் தாள்-2 நடத்துவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) வெளியிட்டுள்ளது. இதில் தோ்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி மற்றும் இணைய விண்ணப்ப நடைமுறை தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கு இணையவழியில் செப். 8-ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். டெட் தோ்வு அறிவிக்கை தொடா்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது கட்டுப்பாடு இல்லை... ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெட் தாள்-1 தோ்வு நவம்பா் 1-ஆம் தேதியும், தாள்-2 தோ்வு நவம்பா் 2-ஆம் தேதியும் நடத்தப்படும். தோ்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை. தாள்-1 தோ்வுக்கு இடைநிலை ஆசிரியா்களும், தாள்-2 தோ்வுக்கு பிஎட் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் தளா்வு... பொதுப் பிரிவினா் 150-க்கு 90 மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டுப் பிரிவினா் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி எஸ்டி) 150-க்கு 82 மதிப்பெண்ணும் பெற்றால் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுவா். டெட் தோ்வில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் எஸ்டி வகுப்பினருக்கு மதிப்பெண் தளா்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவா்கள் டெட்தோ்ச்சிக்கு 150-க்கு 60 மதிப்பெண் (40 சதவீதம்) பெற்றால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. டெட் தோ்வுக்கு உரிய கல்வித் தகுதியுடைய ஆசிரியா்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க

மாவட்ட சுகாதார மையங்களில் செவிலியர், லேப் டெக்னீசியன் பணிகள்!

ஈரோடு மாவட்டத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்வரும் திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகு... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

புதுதில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (டிஆர்டிஓ) சயின்டிஸ்ட் , பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் , அறிவியல் பட்டதாரிகளிட... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ... மேலும் பார்க்க