தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய...
மாவட்ட சுகாதார மையங்களில் செவிலியர், லேப் டெக்னீசியன் பணிகள்!
ஈரோடு மாவட்டத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்வரும் திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
மொத்த காலியிடங்கள்: 120
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 106
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி : செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். பின்னர் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician,
காலியிடங்கள் : 11
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி : +2 தேர்ச்சியு டன் ஒரு ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Pharmacist
காலியிடங்கள் : 3
சம்பளம் : மாதம் ரூ.15,000
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்சும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:www.erode.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம், பின்கோடு எண். 638 012.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.