Personal Finance: 8ஆம் வகுப்புக்கு ரூ.1,30,000? படிப்புச் செலவைச் சேர்க்க ஈஸி வழ...
ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா!
இந்திய பேட்டர் திலக் வர்மா ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்த திலக் வர்மா (22 வயது) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-இல் அறிமுகமானார்.
திலக் வர்மா 25 சர்வதேச டி20 போட்டிகளில் 749 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
மொத்தமாக, இவர் 119 டி20 போட்டிகளில் 3,658 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் திலக் வர்மா கடைசி சீசனில் சுமாராகவே விளையாடினார்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் சமீபத்திய போட்டிகளில் மோசமாக விளையாடியதால் அவரது புள்ளிகள் தரவரிசையில் கீழே சரிய திலக் வர்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்
1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள்
2. திலக் வர்மா - 804 புள்ளிகள்
3. பில் சால்ட் - 791 புள்ளிகள்
4. டிராவிஸ் ஹெட் - 782 புள்ளிகள்
5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள்
6. சூர்யகுமார் யாதவ் - 739 புள்ளிகள்