செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணி

post image

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள அரசு வழக்குகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Office Assistant

காலியிடங்கள்: 16

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ.50-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் கவருடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Advocate General of Tamil Nadu, High Court, Chennai - 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.8.2025

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

Applications are invited for the vacant posts of Office Assistant in the Government Litigation Department in Chennai and Madurai districts.

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு:பணி: கிராம உதவ... மேலும் பார்க்க

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந... மேலும் பார்க்க

சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்... மேலும் பார்க்க

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) நவ. 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில்... மேலும் பார்க்க

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 212 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க