செய்திகள் :

`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!

post image

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி வெங்காய விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்நாட்டில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தியது. இதனால் வெங்காய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மாநில அரசு வெங்காயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். வெங்காயத்திற்கு குறைந்த பட்சமாக ரூ.24 கொடுக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன

கடந்த 2023ம் ஆண்டு வெங்காயத்தின் விலை மிகவும் மோசமாக சரிந்தது. இதையடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த மானியம் சில விவசாயிகளுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மாநில அரசு மானியம் பெறாத வெங்காய விவசாயிகளுக்கு மானிய தொகையை அறிவித்துள்ளது. மொத்தம் 14661 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதற்காக 28.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக பட்சமாக நாசிக் மாவட்டத்தை விவசாயிகளுக்கு ரூ.18 கோடி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி ஒரு விவசாயி அதிக பட்சமாக 200 குவிண்டால் வெங்காயத்திற்கு மானியம் பெற முடியும். இப்பிரச்னை குறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். அதோடு விவசாயிகள் சங்கத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பச்சுகாடு இதற்காக உண்ணாவிரதமும் இருந்தார். தற்போது விவசாயிகள் ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.1800 முதல் 2000 வரை விலையாக பெறுகின்றனர்.

1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிருந்து தாராள வருமானம்

தொடர்வேளாண் காடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற, தடசு மரத்தின் தனிச்சிறப்புகள், சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மரங்களின் கழிவுகளிலிருந்து, ‘பயோ சார... மேலும் பார்க்க

ஒரே குளத்தில் ஊறிய எடப்பாடியும் ஸ்டாலினும்... வீணாகிக்கொண்டே இருக்கும் நெல் மூட்டைகளும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... விவசாயிகளுக்கு அதைச் செய்வோம்... இதைச் செய்வோம்’ என்று முழங்கியபடி ஊர் ஊராகச் சுற்றிவருகிறார், முன்னாள்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.நாகராசு,சொக்கலை,தஞ்சாவூர்.97863 57127இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறுப்புக் கவுனி புழுங்கல் அரிசி, குறுணை.கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | Photo Album

டேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீ... மேலும் பார்க்க

ஊட்டி: `மங்குஸ்தான் கிலோ ரூ.300' - நேரடி விற்பனையில் இறங்கிய தோட்டக்கலைத்துறை!

நீலகிரி மலையில் நிலவும் குளிர்ந்த காலநிலையைக் கண்டறிந்து 200 வருடங்களுக்கு முன்பு குடியேறிய பிரிட்டிஷார், தங்களுக்கான வாழிடச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டனர். மங்குஸ்தான் பழ விற்பனை தேயிலை, காஃபி மட்டு... மேலும் பார்க்க