செய்திகள் :

நம் சூப்பர் ஸ்டாரை பாசத்துடன் பாராட்டுகிறேன்: கமல் ஹாசன்

post image

நடிகர் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அபூர்வ ராகம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அபூர்வங்களில் ஒன்றாகவே இருக்கும் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்த நீண்ட பயணத்தில் அவருடன் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவின் அரை நூற்றாண்டு காலத் திறமையைக் குறிப்பிடுவதுபோல், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்.

நமது சூப்பர் ஸ்டாரை நானும் பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். இந்தப் பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியைக் கூலி திரைப்படம் பெற வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

actor kamal haasan shares his wishes to actor rajinikanth for his 50th year in cinema

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.அண்... மேலும் பார்க்க

கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து காமன்வெல்த் ... மேலும் பார்க்க

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 10 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுவோர், காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் பற்றி ஹார்வர்டு மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இரைப்பைக் குடல் மருத்துவர் சௌரவ் சேதி வெளியிட்டுள்ளார். மேலும் பார்க்க

கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!

கயல் தொடரில் மூர்த்தி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஐயப்பன், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். கயல் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிற... மேலும் பார்க்க

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அருண் பாண்டியன் தயாரிப்பில் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அஃகேனம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான 'அஃகேனம்' எனும் படத்தில் அர... மேலும் பார்க்க