தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
சுற்றுச்சூழல் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட், மூத்த கணக்கு அலுவலர் மற்றும் தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 01/2025
பணி: Project Associate
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.68,400
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Accounts Officer
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.68,400
தகுதி: வணிகவியல், கணக்கியல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Tally-இல் நல்ல திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
பணி: Personal Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.28,500
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.8.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.environment.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.