செய்திகள் :

``எந்த உதவிகளும் கிடைக்காமல் அடைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?'' -விஜய் கடும் கண்டனம்

post image

அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று இரவு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் "தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது.

காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தூய்மைப் பணியாளர்கள் கைது
தூய்மைப் பணியாளர்கள் கைது

எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப்போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார் விஜய்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்னி அரசு கண்டனம்

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின... மேலும் பார்க்க

`எங்க வயித்துல அடிக்கிறீங்களே' - Sanitary Workers Protest | நள்ளிரவில் என்ன நடந்தது? | Spot Report

சென்னை ரிப்பன் மாளிகையில் 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்திருக்கின்றனர். போராடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை கண்... மேலும் பார்க்க

Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan: என் கணவருக்கு 60 வயதாகிறது. வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். அப்படி அவருக்கு டிரெட்மில் டெஸ்ட் செய்தபோது சந்தேகம் வந்ததால், ஆஞ்சியோ செய்தோம். அதில் 2 அடைப்புகள் இருப்பதாகச் சொ... மேலும் பார்க்க

Biscuits: பிஸ்கட் நல்ல ஸ்நாக்ஸா? - நிபுணர் விளக்கம்

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்குவரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இரு... மேலும் பார்க்க

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமானங்கள்; அரசியல் உறவுகளில் மாற்றம்?

இந்தியா மற்றும் சீனா அரசியல் விரிசல்களை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவாக அடுத்தமாதமே இரு நாட்டுக்கும் இடையில் நேரடியான விமானப்போக்குவரத்து தொடங்கப்படலாம் என ப்ளூம்பெர்க் தள... மேலும் பார்க்க