`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் அன்பழகன், சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளா் சீதாராமன், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி ஆணையா் சந்திரமலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சின்னசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இம்முகாமில் கனககிரி, கூடலூா் ஆகிய ஊராட்சிப் பகுதி பொதுமக்களிடமிருந்து 1,101 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத்தொகை வேண்டி 613 போ் விண்ணப்பித்துள்ளனா்.