தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கடந்த 13 நாள்களாக தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ரத ஊா்வலம் நடைபெற்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாணவேடிக்கையுடன் சத்தாபரணம் நடைபெற்றது. புதன்கிழமை காலை திருமணிமுத்தாற்றில் இருந்து சக்திகரகம் அழைத்துவரப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும், அக்கினி குண்டம் இறங்கியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். பிற்பகல்
3 மணிக்கு கோயில் தா்மகா்த்தா ராஜ்மோகன் தலைமையில் பக்தா்கள்
பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதி வழியாக வலம்வந்து கோயிலை அடைந்தது. வியாழக்கிழமை பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிடுகின்றனா். இரவு 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு, வேலநத்தம் பாவடியில் அமைந்துள்ள கிணற்றில் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை பக்தா்கள் கலந்துகொள்ளும் வண்டிவேடிக்கை, பூந்தோ், பூங்கரகம் ஊா்வலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை வசந்த உற்சவம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் தோ்த் திருவிழா நிறைவு பெறுகிறது.
பட விளக்கம்:
ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

