தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது? - அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் கர்னல் சோஃபியா குரேஷி சொல்வதென்ன?
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் கர்னல் சோஃபியா குரேஷி "ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவைப்பட்டது" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) நிகழ்ச்சியின் 17-வது சீசன் ஆகஸ்ட் 11-ம் தேதி மீண்டும் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
இதில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஊடக அறிவிப்புகளில் முக்கிய பங்கு வகித்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சோனி டிவி வெளியிட்ட ப்ரோமோவில் தொகுப்பாளர் அமிதாப் பச்சன், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் ப்ரேர்ணா தியோஸ்தலீ ஆகியோரை நிகழ்ச்சியில் வரவேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 காலை இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையாகும்.

ஆபரேஷன் சிந்தூர் ஏன் இந்தியா நடத்தப்பட வேண்டியிருந்தது என்பது குறித்து கர்னல் சோஃபியா குரேஷி விளக்கினார். அந்த ப்ரோமோவில் "பாகிஸ்தான் இதை தொடர்ந்து செய்து வருகிறது. எனவே பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 15 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த சிறப்பு எபிசோடில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அதிகாரிகள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.