செய்திகள் :

Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்

post image

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பியாக இருக்கிறார்.

ஜெயாபச்சன் எப்போதும் சற்று கோபப்படக்கூடியவர். அதுவும் அருகில் புகைப்படம் எடுக்க யாராவது வந்தால் அவர்களை திட்டித்தீர்த்துவிடுவார்.

நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப் கேட்டில் நின்று ஜெயாபச்சன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அவரது அருகில் வந்த ஒருவர் ஜெயாப்ச்சனிடம் கேட்காமல் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அதனை பார்த்து ஜெர்க்கான ஜெயாபச்சன் செல்பி எடுத்த நபரை அவரது நெஞ்சில் தனது கையால் குத்தி விட்டு, `என்னாது' என்று கோபத்தோடு கேட்டார்.

கோபத்தில் குத்திய ஜெயாபச்சன்

அதோடு அவரை நோக்கி கடும் கோபத்தோடு பார்த்தார். அவரது கோபத்தை கண்ட செல்பி எடுத்த நபர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஜெயாபச்சனுக்கு பின்னால் சிவசேனா(உத்தவ்) எம்.பி.பிரியக்கா சதுர்வேதி நின்று கொண்டிருந்தார். ஜெயாபச்சனின் செயலை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜெயாபச்சன் நடந்து கொண்ட வித வீடியோ காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்

இதற்கு முன்பு ஒரு முறை தனது அருகில் அடுத்தவர்களை வர விடாதது குறித்து ஜெயாபச்சனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுபவர்களை நான் வெறுக்கிறேன். நான் இவ்வாறு நடந்து கொள்வது புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்தே இது போன்றுதான் நடந்து கொண்டிருக்கிறேன்.

என் வேலையைப் பற்றிப் பேசினால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அவள் ஒரு மோசமான நடிகை, இந்தப் படத்தை மோசமாகச் செய்தாள், அவள் அழகாக இல்லை' என்று சொல்லுங்கள், ஏனென்றால் அது காட்சி ஊடகம். அதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மற்றவற்றை நான் எதிர்க்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதனால் மும்பையில் அவர் அருகில் பத்திரிகையாளர்கள் செல்லவே பயப்படுவார்கள்.

``சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலை அடைந்தாலும், அவர் எளிமையின் சிகரம்'' - ரஜினிகாந்த் குறித்து சசிகலா

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதி... மேலும் பார்க்க

``காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' - CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை... மேலும் பார்க்க

நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் அபர்ணா லவகுமார். திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளிக்குத் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

WAR 2: நடிகை கியாரா அத்வானியின் பிகினி காட்சியை நீக்கிய தணிக்கை குழு

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'வார் 2', ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார். வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படைய... மேலும் பார்க்க

விபத்தில் 6 ஆண்டுகள் படுக்கை; `குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?'

மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையி... மேலும் பார்க்க