செய்திகள் :

``காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' - CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

post image

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை விதித்து இருக்கிறது. இதனால் குழந்தைகள் உணவு இல்லாமல் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.

காசாவில் நடந்து வரும் இத்தாக்குதல்களை கண்டித்து மும்பையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி, `அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை பவுண்டேசன்' மும்பை போலீஸில் மனு கொடுத்திருந்தனர்.

இம்மனுவை மும்பை போலீஸார் தள்ளும்படி செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த மாதம் 10-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் இதற்காக ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.

கடந்த மாதம் 19-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மும்பை போலீஸாரிடமும் காசா தாக்குதலுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி மனு கொடுத்திருந்தது.

கடந்த மாதம் 25-ம் தேதி இம்மனுவின் மீது தீர்ப்பு கூறிய நீதிபதிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு நீதிபதி குகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, ''மனுதாரர் குறுகிய பார்வை கொண்டவராக இருப்பதற்குப் பதில் இந்தியாவில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சொந்த நாட்டைப் பாருங்கள். தேசபக்தராக இருங்கள். இது தேசபக்தி அல்ல. நமது சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளுக்காக குரல் கொடுங்கள்" என்று வாய்மொழியாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் சிபிஐ (எம்)யின் விண்ணப்பத்தின் மீது தகுதியின் அடிப்படையில் மும்பை போலீஸார் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதி குகே தலைமையிலான அமர்வு குறிப்பிட்டது.

மும்பை உயர்நீதிமன்றம்

சிபிஐ(எம்)-இன் விண்ணப்பத்தை ஆய்வு செய்த போலீஸார் அம்மனுவை நிராகரித்தனர். அக்கட்சி உயர் நீதிமன்றத்தில் இதற்காக புதிய மனுவைத் தாக்கல் செய்தது.

இம்மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ(எம்) சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ''வரும் 20-ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மும்பை போலீஸார் அனுமதி வழங்கி இருக்கின்றனர். இப்போராட்டத்தின் போது போலீஸார் விதித்துள்ள விதிகளை முழுமையாக பின்பற்றுவோம்'' என்று குறிப்பிட்டார்.

இதே போன்று அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ''சிபிஐ(எம்) அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு அனுமதி கொடுக்கும். இதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

``சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலை அடைந்தாலும், அவர் எளிமையின் சிகரம்'' - ரஜினிகாந்த் குறித்து சசிகலா

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதி... மேலும் பார்க்க

Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பியாக இருக்கிறார். ஜெயாபச்சன் எப்போதும் சற்று கோபப்படக்கூடியவர். அதுவும் அருகில் புகைப்படம் எடுக்க யாராவது வ... மேலும் பார்க்க

நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் அபர்ணா லவகுமார். திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளிக்குத் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

WAR 2: நடிகை கியாரா அத்வானியின் பிகினி காட்சியை நீக்கிய தணிக்கை குழு

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'வார் 2', ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார். வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படைய... மேலும் பார்க்க

விபத்தில் 6 ஆண்டுகள் படுக்கை; `குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?'

மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையி... மேலும் பார்க்க