Rajinikanth 50: நடிகர்கள் சூர்யா, சிம்பு முதல் சூரி வரை - ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது.
உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் சூர்யா:
ரஜினிகாந்த் சார், இந்திய சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கூலி படத்துக்காக லோகேஷ் & குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் சிம்பு:
"ஐம்பது ஆண்டுகள், ஆனால் தலைவர் படத்திற்காக அரங்கம் இன்னும் ஆர்ப்பரிக்கிறது! சினிமாவில் புகழ்பெற்ற 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி சாருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து பிரகாசிக்க வாழ்த்துகள். மேலும், கூலி திரைப்படம் மகத்தான வெற்றிபெற வேண்டும் என உங்களுக்கும் படக் குழுவினரான லோகேஷ் கனகராஜ், அனிருத்துக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன்:
இன்று என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் லோகேஷ் கனகராஜின் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் ஒரு படமாக வேண்டுமென என் முழு மனதுடன் பிரார்த்திக்கிறேன். நாகார்ஜுனா சார் உங்களின் அற்புதமான நடிப்பை பார்க்க காத்திருக்கிறேன்.

நடிகர் சூரி:
தலைவா! மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் புகழ்பெற்ற 50 ஆண்டுகளை கடந்திருக்கிறீர்கள். ரஜினி சார் உங்கள் பயணம் சினிமாவைத் தாண்டியது. அது நம் அனைவரையும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கவும், மன உறுதியையும், காலத்தால் அழியாத மாயாஜாலத்தையும் நிகழ்த்திய கதை.
உலகம் முழுவதும் திரையரங்குகளில் கூலி புயலடிக்கிறது. உங்கள் ஒப்பற்ற மக்களை கவரும் ஆற்றல் திரையில் ஒளிர்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சகோதரர் லோகேஷ் கனகராஜின் தொலைநோக்கு இயக்கம், அனிருத்தின் அதிரவைக்கும் இசை, சன் பிக்சரின் பிரமாண்டமான தயாரிப்புடன், இது ஒரு அற்புதமான குழுவின் அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்ட படம். முழு கூலி படக் குழுவிற்கும் வாழ்த்துகள். தலைவா, உங்கள் தாக்கம் நித்தியமானது. அது இன்றும், நாளையும், என்றென்றும் நேசிக்கப்படும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...