செய்திகள் :

`ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும்' - அரசின் பார்வைக்கு எட்டுமா இந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் குரல்

post image

மாலை நேரம்,

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் வாயிலில் இரண்டு இனிமையான குரல்கள், சலசலக்கும் சாலையில் கவிமீட்டிக் கொண்டிருந்தன.

அருகே சென்றபோது இரண்டு பார்வையற்றவர்களின் குரல் எதிரே எதிரொலித்தது. அவர்கள் தங்களது பாடல்களைப் பாடி முடித்தபோது பேசத் தொடங்கினோம். அங்கிருந்த முத்துக்கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்...

"தச்சநல்லூரிலிருந்து நான் வருகிறேன். அங்கு ஒரு அறை எடுத்துத் தங்கி, சில இடங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியே என் குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன். என் குடும்பம் பணக்குடியில் வசித்து வருகிறது. குடும்பத்தைப் பார்க்க வேண்டுமென்பதால் அதில் வருகின்ற வருமானத்திலேயே என் குடும்பம் இயங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குகின்ற உதவித்தொகை ரூ.1,500ஆக இருக்கிறது.

உதவித்தொகையே இன்னும் கிடைக்கவில்லை

ஆனால் இன்றைய விலைவாசி உயர்வில் இவ்வளவு வருமானம் குடும்பத்தை நிர்வகிக்கப் போதாதல்லவா? அரசு வேலைகளுக்கும் முயற்சி செய்து பார்த்தோம். இன்று எம்.ஏ, பி.எட் படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லையே?" என்று சொல்ல, முத்துக்கிருஷ்ணனோடு பாடிய ஐயப்பன் தொடர்ந்தார்.

" எனக்கு அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையே இன்னும் கிடைக்கவில்லை" என்றார் வேதனையுடன்.

மேலும் அவர், " நான் இங்கு தான் வசித்து வருகிறேன். எனது குடும்பம் கடையத்தில் வசித்து வருகிறது. தற்போது குடும்பத்தில் ஒரு சிறு பிரச்னை. பாடல்கள் பாடி வருகின்ற வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கைச் செல்கிறது" என்று கூறியபடி தனது மிமிக்ரி திறனையும் வெளிப்படுத்த ஆயுத்தமானார் ஐயப்பன்.

பாடல்களின் மூலமாகத்தான் வருமானம்

உடனே தன் மைக்கைத் தட்டி காகம் கரைக்கும் சத்தம், குழந்தையின் அழுகுரல், சத்யராஜின் குரல், சேவல் கூவுகின்ற சத்தம், நாய் குரைக்கின்ற சத்தம் என்று பல குரல்களை மிமிக்கிரி செய்து சலசலக்கும் சாலையையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பிறகு ஒரு இனிமையான பாடலையும் பாடி, "இசை சார்ந்த துறைகளில் அரசு எனக்கு வேலை தந்தால் போதும்" என்று நிறைவு செய்தார்.

இறுதியாக முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது, "எங்களுக்கு வருமானம் என்பது நாங்கள் பாடுகின்ற பாடல்களின் மூலமாகத்தான் கிடைக்கிறது. அரசு எங்களுக்கு ஏதேனும் ஒரு வேலை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என்று சொன்னபடியே, "இது ஒரு பொன்மாலை பொழுது" என்கிறப் பாடலைத் தன் குடும்பத்தின் நிலையை மாற்ற மீண்டும் பாடத்தொடங்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொதுமக்கள்!

கேரளவில் பெண்களின் தங்க நகைகளை தூக்கிக்கொண்டு பறக்கும் காகங்களின் தொல்லைகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள மதிலகம் பகுதியில் அங்கன்வாடியில் உதவியாளாராக வேலை ச... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்கும் மதுரை தம்பதி!

ஒரு காதல் என்ன செய்யும்…? டூயட் மட்டும் பாடி மகிழாது. அவ்வப்போது புரட்சியையும் நிகழ்த்தும். அப்படித்தான் மதுரை ஆனையூர் பகுதியில் சமூகம் மற்றும் பொருளாதாரீதியில் பின்தங்கியுள்ள பள்ளிக்கூட மாணவர்களைத் த... மேலும் பார்க்க

பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய்வறிக்கை சொல்வதென்ன?

பழங்குடி மக்கள் குறித்த போதுமான ஆய்வுகள் இன்னமும் செய்யபடவில்லை. அழிந்து வரும் நிலையில் பல பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. காடுகள் அழிப்பு, நகரமயமாதல் போன்ற காரணங்களால் காடுகளிலிருந்து வெளியேற்றபடும் ... மேலும் பார்க்க

'ஜூலை 30' வாழ்வை விழுங்கிய நாளின் பெயரில் உணவகம் - 11 பேரை வயநாடு நிலச்சரிவில் இழந்தவர் சொல்வதென்ன?

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் நடுங்கும் கோரமான இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்... மேலும் பார்க்க

மதுரை: `அரசு மருத்துவமனைக்கு வரும் 1000 பேருக்கு தினமும் மதிய உணவு!' - அசத்தும் நட்சத்திர நண்பர்கள்

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு கடந்த 500 நாள்களாக தினமும் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி.நட்சத்திர நண்... மேலும் பார்க்க